கேள்வி பதில். சாதகம் பார்ப்பது எப்படி? சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி ? விளக்கும் காணொளி காட்சி. சோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் இங்கு காணலாம். அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இங்கு கொடுக்கபட்டுள்ளது.
1. பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவை முக்கியமா ?
ஆம், தமிழ் ஜாதகமானது பிறந்த நேரம் தேதி, இடம் ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். எனவே பிறந்த நேரம் முக்கியமானது.
2. பிறந்த இடத்தினை எவ்வாறு பதிவு செய்வது ?
முதலில் பிறந்த இடத்தின் முதல் மூன்று எழுத்துகளை பதிவு செய்யவும், அவ்வாறு செய்யும் போது தோன்றும் இடங்களின் பெயர் பட்டியலில்;
1. உங்கள் பிறந்த இடம் இருப்பின் தெரிவு செய்யவும்.
2. உங்கள் பிறந்த இடம் இல்லை எனின் பிறந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு இடத்தினை பட்டியலில் இருந்து தெரிவு செய்யவும்.
3. பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது தொங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்யவும். பட்டியலிலிருந்து தெரிவு செய்யாத ஒரு பெயரினை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளாது. அத்துடன் "சமர்பி" இணைப்பும் காண்பிக்கப்பட மாட்டாது.
பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது பிறந்த இடத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்றால் காரணம்;
1. எழுத்து பிழை.
2. உங்கள் ஊரின் பெயர் எமது பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்.
4. பிறந்த இடம் பெரிய நகரம், நகரத்தின் பெயரில் காண்பிக்கபடும் பட்டியலில் நிறைய இடங்கள் உண்டு. இதில் எந்த இடத்தினை தெரிவு செய்வது ?
பெரிய நகரின் பெயர், மாநிலத்தின் பெயர் போன்று கொடுக்காமல் உங்கள் பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கவும். உதாரணமாக சென்னை நகரில் கொட்டிவாக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் Kotivakkam பெயரினை கொடுக்க வேண்டும். சென்னை என்று கொடுக்க வேண்டாம்.
5. நேர மண்டலம் என்பது என்ன?
உங்கள் பிறந்த இடம் கிரீன்விச் இடைநிலை நேரத்தில் இருந்து எத்தனையாவது நேரமண்டலத்தில் உள்ளது என்பதாகும். பிறந்த இடத்தினை எமது தரவுகளிலிருந்து தெரிவு செய்தவுடன் அவ் இடத்திற்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேர மண்டலத்தினையும் காணலாம்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற சில நாடுகளில் நேரமண்டலங்கள் சில தடவைகள் மாற்றி அமைக்க பட்ட காரணத்தினால் உங்கள் பிறந்த வருடத்திற்கான நேர மண்டலம் சரியானதா என பார்த்து தேவைப்பட்டால் திருத்தம் செய்யவும்.
6. கோடை நேரம் என்றால் என்ன ?
சில நாடுகளில் கோடை காலங்களில் நேர மண்டலம் மாற்றி அமைக்கபட்டு கோடை நேரம் (DST, Day light saving time அல்லது Summer time) என்று சொல்வர். நீங்கள் பிறந்த தேதியானது கோடை கால நேர மண்டலதிற்குரிய நேரத்தினை கடைப்படிக்கும் நேரம் எனின் கோடை நேரத்தினை தெரிவு செய்யவும்.
7. எந்த உலாவியினை பயன்படுத்தலாம் ?
Chrome, Firefox, Safari, Opera உலாவிகளை பயன்படுத்தி உலாவலாம். Internet explorer யினை பயன்படுத்துவதனால் cache memory யில் உள்ளவைகளை அகற்றவும்.
8. இவ் இணைய தளம் பயன்படுத்தும் பஞ்சாங்கம் எது?
லாஹிரி அயனாம்சம் கணிப்புடன் கூடிய தமிழ் திருக்கணித பஞ்சாங்கம்.
9. இவ் இனைய தளத்தில் வழங்கப்படும் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என விளக்கும் காணொளி காட்சி படங்கள் உள்ளனவா?
ஆம், கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.
1. சாதகம் பார்ப்பது எப்படி ? தெரிந்து கொள்ளுங்கள்.
2. சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி ? தெரிந்து கொள்ளுங்கள்.