கிரக நிலை
கிரக நிலை, கிரகங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே ஜாதக பலன் கூற முடியும். பிறந்த நேரம், இடம், தேதிக்குரிய கிரக நிலையை நீங்களே கணிக்கவும்.
ஜாதக பலன் அறிவதற்கு ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில் இருக்கிறது என அறிந்து இராசி, நவாம்ச கட்டங்களை வரைந்த பின்பே பலன் சொல்லலாம்.
கிரகங்களின் நிலை அதாவது இன்றைய கோச்சாரம் என்னவென்று அறிந்து கொள்வதற்கு அவ் இடத்திற்குரிய உள்ளூர் பஞ்சாங்கம் தேவை. தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும்.
ஏனெனில் பஞ்சாங்கத்தில் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.
கிரக நிலையினை கிரக ஸ்தானம் என்றும் கிரக கோணங்கள், கிரகங்களின் இருப்பிடம் என்றும் அழைப்பர்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள், தமது உள்ளூர் பஞ்சாங்கம், கிரக நிலை இரண்டையும் நொடிப் பொழுதில் பெறுவதற்காக இவ் இணைய தளத்தில் கொடுக்கப்படும் தரவுகளுக்கு உரிய பஞ்சாங்கம், மற்றும் கிரக நிலை இரண்டினையும் உடனுக்குடன் இலவசமாக வழங்குகிறோம்.
கிரக நிலை கட்டம்
இன்றைய கிரக கட்டம் எதுவோ அதனை இன்றைய ராசி கட்டம் என்றும் இன்றைய ஜாதக கட்டம் அழைக்கப்படும். அதேபோல் நாளைய கிரக நிலை கட்டம் என்பதே நாளைய ஜாதக கட்டம் ஆகும்.
கிரக நிலை கணிப்பு
எந்த ஒரு இடத்திற்கு தேதிக்கு, நேரத்திற்கு, நேர மண்டலத்திற்கு, கிரக நிலை தெரிய வேண்டுமோ, இப்பொழுதே இத் தளம் வழியாக கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.