பொருத்தம் என்பது பொதுவாக இரு ஜாதகங்கள் இடையே உள்ள பொருத்தம் ஆகும். ஜோடிப் பொருத்தம் பார்த்தல் என்பது, இருவர்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை இரண்டையும் ஜோதிட ரீதியில் தெரிந்து கொள்வதாகும். திருமண பொருத்தம், காதல் பொருத்தம், நட்பு பொருத்தம் என அனைத்தினையும் கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் உண்டு, அவரவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு இவை மாறுபடும். எனினும் இரு உள்ளங்கள் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அவரவர் ஜாதகத்தினை ஆராய்ந்து இவ் இணைய தளம் மூலம் இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.
இங்கு நாம் அலசி ஆராய்ந்து கொடுக்கும் பொருத்தங்கள் பலவாகும், அவையாவன; இரச்சு பொருத்தம், கண பொருத்தம், நாடிப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்க பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசி பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், தினப் (நட்சத்திரம்) பொருத்தம், வேதைப் பொருத்தம், விருட்சப் பொருத்தம், ஆயுள் பொருத்தம், மகேந்திர பொருத்தம்.
திருமண பொருத்தம்
பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம், இரச்சு, கணம், நாடி ஆகிய முக்கியமான திருமண பொருத்தங்களையும், அத்துடன் ஸ்திரீ தீர்க்கம், யோனி, இராசி, இராசி அதிபதி, வசியம், தினம் (நட்சத்திரம்), வேதை, விருட்சம், ஆயுள், மகேந்திரம் ஆகிய அனைத்து பொருத்தங்களையும், மேலும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் உண்டா என அறிந்து, அவை இருப்பின் அவற்றின் பொருத்தத்தினையும் இப்பொழுதே இவ் வலைய பக்கத்தில் இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.
யோனிப் பொருத்தம்
சிற்றின்ப பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது. சிற்றின்ப பொருத்தத்தினை யோனி பொருத்தம் என்றும் கூறுவர்.
உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து இருவருக்குமிடையே உள்ள யோனி பொருத்தத்தினை இப்பொழுதே இலவசமாக அறிந்து கொள்ளுங்கள்.
நட்பு பொருத்தம்
நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர். ஆதலால், எமக்கு அப்படி ஒரு நிலைமை வரும்வரை, எமது நண்பன் யார் என்பது தெரியாது.
அவ்வாறான ஒரு காலம் வரும் வரை காத்திருக்காமல் நீங்கள் யாரை நண்பன் என கருதுகிறீர்களோ உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து நட்பின் பொருத்தத்தினை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.