ஜாதகம் பொருத்தம் என்றால் என்ன?
ஜாதகம் பொருத்தம் என்பது இருவரின் பிறந்த நேரம், நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் வாழ்க்கைப் பொருத்தத்தை மதிப்பிடும் ஒரு முறையாகும். இது திருமண பொருத்தத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணியாகும்.
ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி?
ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும் எனின், ஆண், பெண் இருவரினது ஜாதகத்தினை தனியாகவும், சேர்த்தும் பார்த்து, இரு ஜாதகமும் ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என தெரிந்து கொள்க.
திருமண ஜாதக பொருத்தம் முக்கியத்துவம்
திருமண ஜாதக பொருத்தம் என்பது இரு தரப்பினரின் வாழ்க்கை முறை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி தமிழ் ஜோதிடம் பிரகாரம் தெரிந்து கொள்வதாகும்.
தமிழ் ஜோதிடப்படி திருமண பொருத்தம் பார்த்தல் என்பதனை ஜாதகம் பார்த்தல், கல்யாண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடி பொருத்தம், சாதக பொருத்தம், கிரக பொருத்தம் மற்றும் குறிப்பு பார்த்தல் எனவும் பலவாறு அழைப்பர்.
திருமணம் செய்யும் நோக்கத்தில் பார்க்கும் பொருத்தம் என்பது, ஜாதக பொருத்தம் பார்த்தல் மட்டும் இல்லாமல், கல்வி, தொழில் என பல கோணங்களில் பார்க்கும் பொருத்தங்களை குறிக்கும்.
சிறந்த திருமண பொருத்தம் எப்படி பார்க்கலாம்?
சிறந்த முறையில் திருமண பொருத்தம் பார்க்க, திருமண பொருத்தம் அட்டவணை தரும் பொருத்தங்கள் அனைத்தினையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் உண்டா என அறிந்து கொள்ள வேண்டும். சிறந்த திருமண பொருத்தம் பார்ப்பது மூலம், திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
தமிழில் இலவசமாக ஜாதக பொருத்தம் பார்க்க
இலவசமாக தமிழில் online ஜாதக பொருத்தம் பார்க்க விரும்பினால், இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். திருமண பொருத்தம் அட்டவணை மற்றும் முடிவுகளை இலவசமாகப் பெறலாம்.
திருமண பொருத்தம் அட்டவணை அவற்றின் முக்கியத்துவம்
திருமண பொருத்தம் அட்டவணை என்பது பலவிதமான பொருத்தங்களை உள்ளடக்கியது. அவற்றில் இரச்சு, கணம், நாடி ஆகியவை மிக முக்கிய திருமண பொருத்தங்கள் என கூறலாம்.
அத்துடன், ஸ்திரீ தீர்க்கம், யோனி, இராசி, இராசி அதிபதி, வசியம் (வசீகரம்), தினம் (நட்சத்திரம்), வேதை, விருட்சம், ஆயுள், மகேந்திரம் ஆகிய பொருத்தங்கள் அவற்றின் முடிவுகள் எப்படி எனவும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் உண்டா என அறிந்து, அவை இருப்பின் அவற்றின் பொருத்தத்தினையும் இவ் வலைய பக்கத்தில் உடனுக்குடன் அலசி ஆராய்ந்து கொடுக்கிறோம்.
திருமண பொருத்தம் முடிவுகள், அதன் விளக்கம், பொருத்தங்களின் அட்டவணை என சகலவற்றையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் கணித்து தெரிந்து கொள்க.
Jathaka porutham in Tamil
Submit your birth details and get your free Jathaka porutham report in Tamil. Analyzing the horoscopes of a groom and a bride for marriage matching, is known as Thirumana porutham in Tamil.