இரத்தின கற்கள் அனைத்தும் அதிர்ஷ்டம் தரும் ராசி கற்கள், எனினும் ஜாதகப்படி ராசியான இரத்தின கல் எது? தெரிந்து கொள்க.
ஒருவரின் ஜாதகப் பிரகாரம் தற்போது நடக்கும் திசை எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரத்தில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.
இரத்தின கல் பதித்த நகை செய்யும் போது, நகையில் உள்ள கல்லின் நடுப் பாகம் உடலில் படுமாறு செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
அத்துடன் கீறல் இல்லாத, வெடிப்பு இல்லாத, சுத்தமான கற்களை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.
உங்கள் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து, ஜாதகப் பிரகாரம் நடப்பு திசைக்கு உரிய கிரகத்திற்கு ஏற்றவாறு அணிய வேண்டிய இரத்தின கல் எது என்று இப்பொழுதே தெரிந்து அணிந்து கொள்ளுங்கள்.