ஜாதக யோகங்கள், தோஷங்கள் பற்றிய முழு விளக்கம்! உங்கள் ஜாதகத்தில் எந்த யோகம், தோஷம் உள்ளது? இலவச கணிப்பை இப்போது பெறுங்கள்.
ஜாதக யோகங்கள் என்றால் என்ன?
ஜாதக யோகங்கள் மற்றும் தோஷங்கள் - உங்கள் வாழ்க்கையை மாற்றும் முக்கிய தகவல்கள்! யோகம் என்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவதனால் ஏற்படும் யோக பலன் என்பதனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான பலனையும் தரலாம்.
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
ஜாதகத்தில் உள்ள யோகங்கள் மூலம், நீங்கள் கோடிஸ்வரர் ஆக முடியுமா, அரசியலில் வெற்றி காண்பீர்களா, அழகிய மனைவி / கணவன் கிடைக்குமா, பெயரும் புகழும் கிடைக்குமா போன்ற கேள்விகளுக்கு உரிய பதில் என்னவென்று அறிய முடியும்.
தமிழ் ஜோதிடத்தில் நூற்றுக்கணக்கான யோகங்கள் உண்டு, அவற்றில் எந்த யோகம் உங்களுக்கு இருக்கிறது. ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிற்சயமாக ஏதோ ஒரு வகையான நல்ல பலன் கொடுக்கும் யோகம் நிற்சயம் இருக்கும்.
யோகங்கள் தோஷங்களின் முக்கியத்துவம்:
ஜோதிடத்தில் பல்வேறு முக்கியமான யோகங்கள் உள்ளன, அவற்றில் சில:
- ராஜ யோகம்: அதிகாரம், வெற்றி மற்றும் உயர்ந்த சமூக நிலையை குறிக்கும்.
- கஜகேசரி யோகம்: உறவினரால் உயர்வு அடைவர். பேரும் புகழும் உடையவர், இறந்த பின்பும் புகழ் மிக்கவர். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.
- சந்திர மங்கள யோகம்: நிதி வளர்ச்சி மற்றும் வணிக நுண்ணறிவை குறிக்கிறது.
- சரஸ்வதி யோகம்: ஞானம், கல்வி மற்றும் கலைதிறன்களை அடையாளம் காட்டுகிறது.
இவ்வாறான யோகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருப்பதை அறிந்து கொள்ளுவதன் மூலம், உங்கள் சக்திகள் மற்றும் சவால்களை புரிந்துகொள்ளலாம்.
ஜாதகத்தில் பல்வேறு முக்கியமான தோஷங்களும் உள்ளன, அவற்றில் சில:
- சூல யோகம்: வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவர். விபத்து போன்றவற்றால் துன்பப்படுவர்.
- பந்தன யோகம்: சிறைவாசம் அனுபவிப்பர். பிறர் கட்டளைக்கு அடி பணிந்து அடிமையாக வாழ்வர் அல்லது ஒரே இடத்தில் கட்டுபட்டு அடங்கி கிடப்பர்.
- கேம துர்ம யோகம்: வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அனுபவிப்பர்.
- தரித்திர யோகம்: வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுவர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகும்.
இதுபோன்ற தோஷங்களை அறிவதன் மூலம், குறிப்பிட்ட பரிகாரங்களை செய்யலாம். பரிகாரங்களில் வழிபாடுகள், ரத்தினக் கற்கள் அணிதல், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் போன்றவை அடங்கும்.
கிரகங்கள் தரும் யோகங்கள்
உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் தரும் யோகங்கள் எவை, யோகம் பலன்கள் என்ன? இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்க.
கிரக நிலைகள், அவற்றின் அமைப்பு தெரிந்து கொண்டால், ஜாதகத்தில் கிரகங்கள் தரும் பல விதமான யோகங்கள் எவை எல்லாம் உண்டு என தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன், கிரகங்கள் தரும் யோகங்கள் மூலம் வாழ்க்கையில் செல்வம், காதல், குடும்ப வாழ்க்கை, சொத்து சுகம், தொழில், புகழ், கல்வி, இன்பம் ஆகியன எவ்வாறு அமையும் என அறிய முடியும்.
இலவச ஜாதக யோக கணிப்பு
உங்கள் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு, ஜாதகத்தில் உள்ள யோகம், தோஷம், அவற்றின் பலன்கள் ஆகியவற்றை எமது இலவச ஜாதக யோக கணிப்பு மூலம் அறியவும்.