மனையடி சாஸ்திரம் குழி கணக்கு, வீட்டின் நீளம் அகலம் அளவுகள், ஆயாதி எண், ஆயாதி பலன், ஆயாதி பொருத்தம், வாஸ்து பற்றி தெரிந்து கொள்க.
மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் என்பது, ஒரு வீட்டின் நீள அகலத்தினை நிர்ணயிக்கும் ஒரு கணித முறையாகும். இதனை மனையடி சாஸ்திரம் அடி கணக்கு, குழி கணக்கு என்றும் அழைப்பர்.
மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள, உங்கள் பிறந்த நேரம், தேதி, இடம், வீட்டின் வெளி அளவு நீளம் அகலம் ஆகியவற்றை உள்ளிட்டு இலவசமாக கணித்து கொள்ளவும்.
வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண், நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் எண், இரண்டுக்கும் மனையடி சாஸ்திரம் கூறும் மனை பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்க.
மனையடி சாஸ்திரம் அளவுகள் என்பது, வீட்டின் வெளி அளவு அதாவது ஒரு வீட்டின் நீள அகலம் எதுவோ, அந்த அளவுகளின் பலன்கள் எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்ளும் ஒரு கணித முறையாகும்.
ஆயாதி பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்து மனையாளை முடிவு செய்வது கொள்வது போல், குடியிருக்க போகும் மனைக்கும் மனையாளுக்கும் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் இம் முறையினை ஆயாதி பொருத்தம், மற்றும் மனை பொருத்தம் என்றும் அழைப்பர்.
ஆகாசத்தில் உயிர் அணுக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த அணுவை மூல அலகாகக் கொண்டு அதன் விரிவுகளை, ஆக்கங்களை அங்குலம், தாளம், முழம் என்ற பல்வேறு பெயருடைய அளவு கோல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த அளவுகளைக் கொண்டே, மாந்தர் வாழும் கட்டிடங்களையும், கோவில் கருவறைகளையும், கோவில் விரிவுகளையும் அளவிட்டுச் செய்து வருவதாயிற்று.