கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன. திருமண தடை ஏற்படுமா. கால சர்ப்ப தோசம் நீங்க பரிகாரம் உண்டா. தெரிந்து கொள்க.
கால சர்ப்ப தோஷம் கட்டம் அல்லது கால சர்ப்ப யோகம் கட்டம் என்பது ஜாதகத்தில் ராகு கேது இரண்டுக்கும் இடையே அனைத்து கிரகங்களும் உள்ள அமைப்பாகும்.
கால சர்ப்ப தோசம் அமைய பெற்ற ஜாதகர்களுக்கு 33 வயது வரை திருமணம், தொழில், காரியத் தடைகள் என பல விடயங்களிலும் தடைகள் ஏற்படலாம். ஆனாலும், 33 வயதினை அடைந்த பின் தடைகள், துன்பம் எல்லாம் நீங்கி இன்பமான வாழ்க்கையினை அனுபவிக்கலாம்.
கால சர்ப்ப தோசப் பரிகாரம்
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கால சர்ப்ப தோசப் பரிகாரம் செய்தால் நன்மைகள் அடையலாம். சிவனை வழிபடுவது ஆன்மீக ரீதியான பரிகாரம். மற்றொன்று பாம்பு வடிவத்தில் உள்ள மோதிரத்தில் வைடூரியம், கோமேதகம் கற்கள் பதித்து அணிதல் ஆகும்.
ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர். ஏனெனில் 33 வயதினை அடைந்த பின் தடைகள், துன்பம் எல்லாம் நீங்கி இன்பமான வாழ்க்கையினை அனுபவிக்கலாம்.
கால சர்ப்ப பரிகார மோதிரம் செய்வதற்கு வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் எதுவானாலும் தெரிவு செய்யலாம். ஆனால் இரத்தின கற்கள் மட்டும் வெடிப்பு இல்லாத இயற்கையான கற்கள் ஆக இருக்க வேண்டும். மோதிரம் செய்யும் போது இரத்தின கற்களை விரலில் படுமாறு பதிக்க வேண்டும்.
கால சர்ப்ப தோசம் calculator
உங்கள் பிறந்த நேரம், இடம், தேதி ஆகியவற்றை இங்கு கொடுத்து உங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கட்டம் அல்லது கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
கால சர்ப்ப தோஷம் பற்றி தெரிந்து கொள்ள தேவையான கால சர்ப்ப தோஷம் calculator முற்றிலும் இலவசம்.